இந்தியா

ஹிந்தி தேசிய மொழியா? இல்லையா? விவாதத்தில் இவர்களும் களமிறங்கிவிட்டார்கள்

28th Apr 2022 01:34 PM

ADVERTISEMENT


பெங்களூரு: ஹிந்தி தேசிய மொழியா? இல்லையா? என்ற வாதம் நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர்கள் அஜய் தேவ்கன், கிச்சா சுதீப் இடையேயான விவாதம் நேற்று பேசுபொருளானது.

அந்த வரிசையில் ஹிந்தி தேசிய மொழியில்லை, இந்தியாவுக்கு என்று தேசிய மொழியில்லை என்ற விவாதத்தில் இன்று கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையாவும் குமாரசாமியும் இணைந்துள்ளனர். 

இதையும் படிக்க.. சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகளில் செயல்படும்

 

ADVERTISEMENT

ஹிந்தி எப்போதும், இனி ஒருபோதும் தேசிய மொழியில்லை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், பல மொழி பேசும் நாட்டின் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டியது கட்டாயம்.  ஒவ்வொரு மொழியும், அதற்கென இருக்கும் உயர்ந்த வரலாற்றைக் கொண்டுள்ளன. நான் கன்னட மொழி பேசுபவன் என்ற பெருமை எனக்குண்டு என்று சித்தராமையா தனது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 

இதையும் படிக்க.. நீயா பட பாணியில் பழிவாங்கத் துடிக்கும் பாம்பு: 7 முறை கடிபட்டவரின் கதை

அஜய் தேவ்கானை டேக் செய்து சித்தராமையா பேசியிருக்க, மற்றொரு முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகர் சுதீப்புக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கிறார். இவர் சொன்னபடி ஹிந்தி தேசிய மொழியில்லை என்பது சரிதான். இவர் சொன்னதில் எந்த தவறுமே இல்லை. என்னைப் பொறுத்தவரை, ஹிந்தியும் ஒரு மொழி, அவ்வளவுதான், எப்படி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளமோ அதுபோலத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT