இந்தியா

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: புதிதாக 3,303 பேருக்குத் தொற்று

28th Apr 2022 10:03 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு 2,927 ஆக இருந்த நிலையில், இன்று புதிதாக  3,303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,252 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை தினசரி வெளியிட்டு வருகின்றது. இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தகவலின்படி,

நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  கடந்த 24 மணி நேரத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 3,303 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,68,799 ஆக உள்ளது. 46 நாள்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 3,000-ஐத் தாண்டியது.

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் உயிரிழந்ததால் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,693 ஆக உள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தோர் விகிதம் 1 சதவிகிதமாக உள்ளது.

நேற்று ஒரேநாளில் 2,252 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,25,28,126 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.74 சதவிகிதமாக உள்ளது. 

தற்போது 16,980  பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.04 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 0.66 சதவிகிதமாக உள்ளது. வராந்திர தொற்று பாதிப்பு 0.61சதவிகிதமாக உள்ளது. 

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 188.40 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இதுவரை 83.64 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,97,669 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க | விண்ணப்பித்துவிட்டீர்களா..? குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ADVERTISEMENT
ADVERTISEMENT