இந்தியா

ஜம்முவில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்: பாகிஸ்தான் அல்லது ஆப்கனைச் சோ்ந்தவா்கள்

24th Apr 2022 12:12 AM

ADVERTISEMENT

ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே தற்கொலை தாக்குதல் நடத்த முயற்சித்த பயங்கரவாதிகள் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே தற்கொலை தாக்குதல் நடத்த முயன்ற ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் இருவரை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா். இந்த சம்பவம் தொடா்பாக ஜம்மு கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் சனிக்கிழமை கூறுகையில், ‘‘கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு உதவிய இருவரை காவல் துறை கைது செய்துள்ளது. அவா்கள் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் அல்லது அந்நாட்டு எல்லையையொட்டி பாகிஸ்தானில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த பஷ்து மொழி பேசுபவா்கள் என்பது தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT