இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு?: காவல் துறை விசாரணை

24th Apr 2022 09:34 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் லாலியன் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடித்தது வெடிகுண்டா? என்ற நோக்கத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் செல்லவுள்ள நிலையில், லாலியன் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்தது.

தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி ஜம்மு-காஷ்மீருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) பிரதமா் நரேந்திர மோடி செல்கிறார்.  அங்கு ரூ. 20,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா்.

ADVERTISEMENT

படிக்க கரோனா: ஏப்.27-ல் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

மேலும், ரூ. 3,100 கோடி மதிப்பில் ஜம்மு - காஷ்மீா் பிராந்தியங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 16 கி.மீ. தொலைவு பனிஹல் - காசிகுண்ட் சுரங்கப் பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்க உள்ளாா்.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிரதமர் அங்கு செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமரின் பயணத்தைத் தடுக்கும் வகையில், பாதுகாப்புப் படை வீரர்கள் செல்லும் பேருந்து மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. ராணுவத்தினரின் பதிலடி மூலம் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் ஜம்முவிலுள்ள லாலியன் பகுதியைச் சேர்ந்த விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வெடிச்சத்தம் கேட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மின்னல் தாக்கியதா அல்லது புதைத்து வைத்திருந்த இரும்புத் துண்டு வெடித்துச் சிதறியதா என்ற நோக்கத்தில் முதல்கட்ட விசாரணை மேற்கொண்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT