கடந்த நிதியாண்டில் (2021-22) 11.1 கோடி டன் நிலக்கரியை ரயில்கள் மூலம் அதிகமாக மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அனைத்து மின் நிலையங்களுக்கும் நிலக்கரியை விநியோகிப்பதில் இந்திய ரயில்வே முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டிலும் நடப்பு ஏப்ரல் மாதத்திலும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில் (2021-22) 11.1 கோடி டன் நிலக்கரியை ரயில்கள் மூலம் அனுப்பி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மொத்தமாக 65.3 கோடி டன் டன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 20.4 சதவீதம் அதிகமாகும். முந்தைய நிதியாண்டில் 54.2 கோடி டன் நிலக்கரி ஏற்றிச் செல்லப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முதல் கடந்த மாா்ச் மாதம் வரை, இரண்டு காலாண்டுகளில் 32 சதவீத நிலக்கரி மின் நிலையங்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை எடுத்துச் செல்ல ரயில்வே முன்னுரிமை அளித்து வருகிறது. மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகமும் சரியான முறையில் நடைபெற்று வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.