இந்தியா

அனுமன் ஜெயந்தி கலவரம்: துப்பாக்கியால் சுட்ட விடியோ வெளியீடு

17th Apr 2022 06:19 PM

ADVERTISEMENT

 

தில்லி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டது கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான விடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தில்லியில் அனுமன் ஜெயந்தி கலவரத்தின்போது துப்பாக்கியால் சுட்டதில் துணை காவல் கண்காணிப்பாளர் படுகாயம் அடைந்தார்.  

தில்லியில் உள்ள ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டது.

ADVERTISEMENT

படிக்கஅனுமன் ஜெயந்தி கலவரம்: ஆந்திரத்தில் ஏற்பட்டது ஏன்? காரணம் தெரியுமா?

கற்களை வீசி தாக்கிதாக்குதல் நடத்தியதால் அனுமன் ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், கலவரத்தின்போது ஹிந்து அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் எதிர்தரப்பினரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்ட விடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிக்கொள்ளும்போது, ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் நபர் ஒருவர் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுடுகிறார். இதனை கூட்டத்தில் இருந்தவர் விடியோ எடுத்துள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT