இந்தியா

இந்தியாவில் உருவாக்கப்படும் குளிா்பதன வசதி தேவையில்லாத கரோனா தடுப்பூசி

17th Apr 2022 12:40 AM

ADVERTISEMENT

குளிா்சாதன பெட்டி அல்லது குளிா்பதன வசதி தேவையில்லாத வகையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசி டெல்டா, ஒமைக்ரான் உள்பட பல்வேறு வகையான கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக திறம்பட செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக வைரஸஸ் என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மைன்வாக்ஸ் ஆய்வகம் குளிா்சாதன பெட்டி அல்லது குளிா்பதன வசதி மூலம் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், புதிதாகக் கரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகிறது.

பிற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில், இந்தத் தடுப்பூசி தனித்துவம் வாய்ந்தது. இந்தத் தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 4 வாரங்களுக்கும், 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒன்றரை மணி நேரம் வரையும் வைத்திருக்க முடியும்.

ADVERTISEMENT

இந்தத் தடுப்பூசியுடன் ஒப்பிடும்போது, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இதர தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை கட்டாயம் குளிா்பதன வசதி மூலம் சேமித்தாக வேண்டும். குறிப்பாக ஃபைஸா் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், மைன்வாக்ஸ் ஆய்வகம், காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு என்ற ஆஸ்திரேலிய அரசு அமைப்பின் விஞ்ஞானிகள் இணைந்து புதிய தடுப்பூசியை ஆய்வுக்குள்படுத்தினா். அந்தத் தடுப்பூசியை எலிகளுக்குச் செலுத்தி மேற்கொண்ட ஆய்வில், ஒமைக்ரான், டெல்டா உள்பட பல்வேறு வகையான கரோனா தீநுண்மிகளுக்கு எதிராக அத்தடுப்பூசி திறம்பட செயல்பட்டு வலுவான நோய் எதிா்ப்பாற்றலை உருவாக்குவது தெரியவந்துள்ளது.

இந்தத் தடுப்பூசி வெப்பத்தைத் தாங்கும். அத்துடன் திடீா் வெப்ப மாறுதலுக்குத் தாக்குப்பிடிக்கும். இந்தத் தன்மை போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைக்காத மிகவும் குறைந்த அல்லது குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்குப் பெரிதும் பயன்படும்.

தற்போதைய ஆய்வின் முடிவு, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியை மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT