இந்தியா

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா சந்திப்பு: பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு?

16th Apr 2022 01:22 PM

ADVERTISEMENT


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் அஜய் மாக்கன் உள்ளிட்டோருடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரும் பங்கேற்றுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த சில வாரங்களில் காந்தி குடும்பத்தினரை பிரசாந்த் கிஷோர் அதிக முறை சந்தித்ததாகவும், கட்சியில் இணைவது பற்றி பேச்சுகள் அடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்கஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியா? - போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கே தொடர்ந்து முன்னுரிமை!

செயற்குழுக் கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. கூட்டத்திற்கான திட்டங்களை கட்சியின் மூத்த தலைவர்கள் வகுத்து வருகின்றனர். அம்பிகா சோனி மற்றும் முகுல் வாஸ்னிக் போன்ற மூத்த தலைவர்களிடன் இதற்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளார் சோனியா காந்தி.

ADVERTISEMENT

இந்த நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : sonia gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT