இந்தியா

ஈஸ்டர் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

16th Apr 2022 08:28 PM

ADVERTISEMENT

ஈஸ்டர் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "ஈஸ்டர் நன்னாளை முன்னிட்டு அனைத்து மக்கள், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் கிறித்தவ சமுதாயத்தினருக்கு, எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

இதையும் படிக்க- பிரசாந்த் கிஷோரிடம் சரணடைகிறதா காங்கிரஸ்?

அன்பு, தியாகம் மற்றும் மன்னித்தலின் வழியை நாம் பின்பற்ற ஊக்கமளிக்கும் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கொண்டாடும் பண்டிகையே ஈஸ்டர் ஆகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொண்டு ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக இணைந்து பணியாற்றுவோம்.

ADVERTISEMENT

ஒற்றுமையின் முக்கியத்துவத்தை நமது மனங்களில் இந்த பண்டிகை மறுபடியும் விதைத்து, நமது நாட்டின் நலன் மற்றும் வளத்திற்கான நமது உறுதிக்கு வலுவூட்டட்டும்,". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT