இந்தியா

குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலை: பிரதமர் மோடி திறந்துவைத்தார்

16th Apr 2022 11:45 AM

ADVERTISEMENT

அனுமன் ஜெயந்தி இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலமாக திறந்துவைத்தார். 

நாட்டில் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டு அதன்படி, முதல் சிலை வடக்குப் பகுதியான சிம்லாவில் 2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவதாக குஜராத் மாநிலம் மோர்பியில் கேசவானந்த் ஆசிரமத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது நாட்டின் மேற்கு திசையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக இன்று திறந்துவைத்தார். மேலும் அங்குள்ள மக்களிடமும் பேசினார். 

தெற்கே ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை நிறுவும் பணி அடிக்கல் நாட்டப்பட்டு அண்மையில் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT