இந்தியா

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலை

16th Apr 2022 09:11 PM

ADVERTISEMENT

கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சீனிவாசன். இவரது கடைக்கு இன்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் சீனிவாசனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

இதையும் படிக்க- பிரசாந்த் கிஷோரிடம் சரணடைகிறதா காங்கிரஸ்?

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். படுகொலை செய்யப்பட்ட சீனிவாசன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் சாரீரிக் பிரமுகர் ஆவார்.

ADVERTISEMENT

இதனிடையே இந்த கொலைக்கு பிஎஃப்ஐ-தான் காரணம் என்று பாஜக தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக பாலக்காடு மாவட்டத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) இஸ்லாமிய அமைப்பின் உள்ளூா் தலைவா் சுபைா் என்பவர் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

இந்த கொலையில் ஆா்எஸ்எஸ் அமைப்புக்குத் தொடா்பு உள்ளதாக பிஎஃப்ஐ குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் இன்று ஆர்எஸ்எஸ் தொண்டர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கேரளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : kerala murder
ADVERTISEMENT
ADVERTISEMENT