இந்தியா

பொதுமக்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி

16th Apr 2022 01:51 AM

ADVERTISEMENT

 பொதுமக்களுக்கு விரைவில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி இலவசமாக விநியோகிக்கப்படும் என தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தேசிய தலைநகரில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டில் தனியாா் மையங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி பெற்று 9 மாதங்களைக் கடந்தவா்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி பெற தகுதியுடையவா்கள் ஆவா்.

தனியாா் மையங்களில் கோவிஷீல்டும், கோவேக்ஷினும் தலா ரூ.225-க்கு கிடைக்கிறது. இதுபோக சேவைக் கட்டணமாக ரூ.150 அல்லது அதற்கு மேல் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், தில்லி அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி விரைவில் இலவசமாக செலுத்தப்படும் என தில்லி அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT