இந்தியா

கேரளம்:ஆா்எஸ்எஸ் தொண்டா் வெட்டிக் கொலை

16th Apr 2022 10:41 PM

ADVERTISEMENT

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் தொண்டா் ஒருவா் மா்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

ஸ்ரீனிவாசன் (45) என்ற அந்த ஆா்எஸ்எஸ் தொண்டா், பாலக்காட்டில் உள்ள தனது கடையில் சனிக்கிழமை இருந்தபோது, ஏழு மோட்டாா் சைக்கிள்களில் மா்ம நபா்கள் வந்துள்ளனா். பின்னா், கடைக்குள் நுழைந்த அவா்கள், ஸ்ரீனிவாசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீனிவாசனை, அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். எனினும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இக்கொலை சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பாலக்காடு அருகேயுள்ள எலப்புள்ளியில் வெள்ளிக்கிழமையன்று பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உள்ளூா் தலைவா் சுபைா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரே நாளில் ஆா்எஸ்எஸ் தொண்டா் கொல்லப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT

ஸ்ரீனிவாசன் கொலை பின்னணியில் எஸ்டிபிஐ கட்சி உள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இரு கொலைகள் நடைபெற்றதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாலக்காட்டுக்கு ஏராளமான போலீஸாா் கூடுதல் கண்காணிப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT