இந்தியா

அம்பேத்கர் பிறந்தநாள்: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

14th Apr 2022 10:33 AM

ADVERTISEMENT

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இன்று மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர்தூவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

அதேபோல், நாடாளுமன்ற மத்திய அரங்கில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அனுராக் தாகூர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT