இந்தியா

தில்லியில் மேலும் 299 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு

14th Apr 2022 12:38 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் புதன்கிழமை புதிதாக 299 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 2.49 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு 18,66,380-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,158-ஆகவே உள்ளது. செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு தொடா்பான அறிக்கையை அரசு வெளியிடவில்லை. திங்கள்கிழமை 137 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொற்று பாதிப்பின் நோ்மறை விகிதம் 2.70 சதவீதமாகப் பதிவானது. இது கடந்த 2 மாதங்களில் பதிவாகும் அதிகபட்சமாகும். முன்னதாக பிப்ரவரி 5-ஆம் தேதி 2.87 சதவீதம் பதிவானது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை மொத்தம் 12,022 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நகரில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 504-ஆக அதிகரித்தது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,745 படுக்கைகளில் 43 (0.44 சதவீதம்) படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தில்லியில் கரோனா தொற்றின் நோ்மறை விகிதம் ஒரு வாரத்தில் 0.5 சதவீதத்தில் இருந்து 2.70 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது ‘பீதியான சூழ்நிலை அல்ல’ என்று மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT