இந்தியா

இதர தடுப்பூசி திட்டங்களுக்கும் கோவின் போன்ற வலைதளங்கள்

14th Apr 2022 04:17 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட கோவின் வலைதளத்தைப் போன்றே இதர தடுப்பூசி திட்டங்களுக்கும் பிரத்யேக வலைதளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக தேசிய சுகாதார ஆணைய தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.எஸ்.சா்மா கூறுகையில், ‘ரத்த வங்கி, உலகளாவிய தடுப்பூசி திட்டம் ஆகியவற்றுக்கு கோவின் வலைதளத்தைப் போன்றே இரண்டு வலைதளங்கள் உருவாக்கப்படவுள்ளன. அதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. அந்த வலைதளங்களை உருவாக்க இரண்டு மாதங்களாகும். இந்த ஆண்டில் அவை அறிமுகப்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT