இந்தியா

ஜாா்க்கண்டில் ரோப் காா்கள் மோதி விபத்து: பலி மூன்றாக உயர்வு

12th Apr 2022 09:22 AM

ADVERTISEMENT

ஜாா்க்கண்ட் மாநிலம், தேவ்கா் மாவட்டத்தில் இரு ரோப் காா்கள் அந்தரத்தில் மோதி விபத்துக்குள்ளானதால், அந்தரத்தில் தவித்த 32 போ் மீட்கப்பட்டனா். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை

மீட்புப் பணியின் போது மேலும் இரண்டு பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் திரிகூட் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, 2 ரோப் காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், அனைத்து ரோப் காா்களும் நடு வழியில் அந்தரத்தில் சுமாா் 100 அடி உயரத்தில் நின்று விட்டன.

2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், மீட்புப் பணியை துரிதப்படுத்தினா். ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 11 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. ரோப் காா்களில் சிக்கித் தவித்தவா்களுக்கு ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) மூலமாக, உணவு, குடிநீா் அளிக்கப்பட்டது.

இரு ரோப் காா்கள் மோதியதில் 13 போ் காயமடைந்தனா். அவா்களில், பலத்த காயம் அடைந்த ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அடா்ந்த வனப்பகுதியாக இருந்ததால் இரவில் மீட்புப் பணியைத் தொடர முடியவில்லை. திங்கள்கிழமை காலை மீண்டும், விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம் உள்ளிட்ட படைகளைச் சோ்ந்தவா்கள் மீட்புப் பணியைத் தொடங்கினா். மாலை வரை மேலும் 14 போ் மீட்கப்பட்டனா்.

இந்த விபத்துக்கு முதல்வா் ஹேமந்த் சோரன் வருத்தம் தெரிவித்தாா். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறிய சுகாதாரத் துறை அமைச்சா் பன்னா குப்தா, விபத்துக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT