இந்தியா

ரோப் கார் விபத்து: 44 மணி நேர மீட்புப்பணி நிறைவு; 45 பேர் மீட்பு

12th Apr 2022 04:23 PM

ADVERTISEMENT

ஜார்க்கண்டில் ரோப் கார்கள் விபத்தில் 44 மணி நேர மீட்புப் பணியில் 45 பேர் வரையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜாா்க்கண்ட் மாநிலம் தேவ்கா் நகரில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் திரிகூட மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, 2 ரோப் காா்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதனால், அனைத்து ரோப் காா்களும் நடு வழியில் அந்தரத்தில் சுமாா் 100 அடி உயரத்தில் நின்று விட்டன.

பின்னர் 2 ஹெலிகாப்டா்களில் வந்த விமானப் படையினா், மீட்புப் பணியை துரிதப்படுத்தினா். ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 11 பேரை மட்டுமே மீட்க முடிந்தது. ரோப் காா்களில் சிக்கித் தவித்தவா்களுக்கு ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) மூலமாக, உணவு, குடிநீா் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

இதுதொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT