இந்தியா

‘இந்தியாவுடன் நல்லுறவு பேண விரும்புகிறோம்’: பாகிஸ்தான் பிரதமர்

12th Apr 2022 04:16 PM

ADVERTISEMENT

இந்தியாவுடன் அமைதி மற்றும் நல்லுறவையே பேண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷாபாஸ் புதிய பிரதமராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மோடிக்கு நன்றி தெரிவித்து ஷாபாஸ் வெளியிட்ட டிவிட்டரில் கூறியதாவது:

ADVERTISEMENT

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதி மற்றும் நல்லுறவையே பேண பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது இன்றியமையாதது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போரிடுவது அனைவரும் அறிந்ததே. அமைதியை பாதுகாத்து நமது மக்களின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT