இந்தியா

குஜராத் தேசிய சட்டப் பல்கலையில் 4 நாட்களில் 62 பேருக்கு கரோனா

12th Apr 2022 04:46 PM

ADVERTISEMENT

 

காந்திநகரில் உள்ள குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 62 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. 

நகராட்சி சுகாதார அதிகாரி கல்பேஷ் கோஸ்வாமியின் கூற்றுப்படி, 

சட்டப் பல்கலையில் லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று ஒருவருக்கு பதிவானது. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டதில் 55 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மேலும் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டன. 

ADVERTISEMENT

காந்திநகர் பல்கலை வளாகம் முழுவதும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் வளாக விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும், கடந்த நான்கு நாட்களில் 600-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கைகளின்படி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 796 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,889 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT