இந்தியா

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 காவலர்கள் பலி

12th Apr 2022 12:48 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 5 காவலர்கள் கொல்லப்பட்டனர். 

தேரா இஸ்மாயில் கானின் குலாச்சி நகரின் சௌக் யாத்கர் அருகே போலீஸ் வேன் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து காவல்துறை கூறுவதாவது,

ADVERTISEMENT

பயங்கரவாதிகள் போலீஸ் வேன் மீது ராக்கெட்டை வீசினர். பின்னர் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தினர். கடுமையான தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 5 காவலர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், தேரா இஸ்மாயில் கானில் பாதுகாப்புப் படையினர் நடத்திய உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT