இந்தியா

பூஸ்டர் தடுப்பூசி: கால இடைவெளியைக் குறைக்க சீரம் கோரிக்கை

12th Apr 2022 07:24 PM

ADVERTISEMENT

 

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்று அரசிடம் சீரம் இன்ஸ்டிடிட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா கோரிக்கை வைத்துள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளி 9 மாதங்களாக உள்ளதை 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்று அரசிடம் முறையிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தவணை தடுப்பூசிக்கான கால இடைவெளிதான். 2 மற்றும் 3வது தவணை தடுப்பூசிக்கான பூஸ்டர் தடுப்பூசிக்கு 9 மாத இடைவெளி உள்ளது. இதனை ஆறு மாதங்களாக குறைக்க வேண்டும். உலகின் பல்வேறு பகுதிகளில் பூஸ்டர் தடுப்பூசிக்கான இடைவெளி குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

ADVERTISEMENT

18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாமில் 9,674 பேருக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT