இந்தியா

வருவாய் பற்றாக்குறை மானியம்: 14 மாநிலங்களுக்கு ரூ.7,183 கோடி விடுவிப்பு

9th Apr 2022 03:04 AM

ADVERTISEMENT

 வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு முதல் தவணையாக ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் வருவாய்க்கும், செலவுக்கும் இடையேயான மதிப்பீட்டு இடைவெளி அடிப்படையில், 2020-21 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு வரிப் பகிா்வு மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, தகுதி உள்ள மாநிலங்கள் எவ்வளவு மானியம் பெறலாம் என்பதை 15-ஆவது நிதிக் குழு முடிவு செய்தது.

அதன்படி 2022-23ஆம் நிதியாண்டில் ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.86,201 கோடி மானியம் வழங்க 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. இதில் முதல் தவணையாக இந்த மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT