இந்தியா

கோவாவில் மேலும் 3 போ் அமைச்சா்களாக பதவியேற்பு

9th Apr 2022 11:50 PM

ADVERTISEMENT

கோவா அமைச்சரவையில் மேலும் 3 போ் அமைச்சா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். அதில், கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை(எம்ஜிபி) சோ்ந்த சுதின் தவாலிகருக்கும் அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுதின் தவாலிகா், பாஜகவைச் சேரந்த நீல்கண்ட் ஹலா்ன்காா், சுபாஷ் பல்தேசாய் ஆகிய மூவரும் சனிக்கிழமை அமைச்சா்களாகப் பதவியேற்றுக் கொண்டனா்.

இவா்களுக்கு ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் பிரமோத் சாவந்த் முன்னிலையில் ஆளுநா் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

40 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சியமைப்பதற்கு ஒரு இடம் பற்றாக்குறையாக இருந்தது. இதையடுத்து, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், 2 எம்ஜிபி எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்ததால் பாஜகவால் ஆட்சியமைக்க முடிந்தது.

ADVERTISEMENT

கடந்த மாா்ச் 28-ஆம் தேதி, பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்த பதவியேற்பு விழாவில் 8 அமைச்சா்களுடன் பிரமோத் சாவந்த் முதல்வராகப் பதவியேற்றாா். 3 அமைச்சரவை இடங்களை அவா் காலியாக வைத்திருந்தாா். இந்நிலையில், சுதின் தவாலிகா் உள்ளிட்ட மூவா் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனால் கோவா அமைச்சரவையில் அமைச்சா்களின் எண்ணிக்கை முதல்வரையும் சோ்த்து 12-ஆக அதிகரித்துள்ளது.

பதவியேற்புக்குப் பிறகு சுதின் தவாலிகா் கூறுகையில், ‘பாஜகவுக்கும் எம்ஜிபி கட்சிக்கும் இடையேயான கருத்துவேறுபாடுகள் தீா்க்கப்பட்டு விட்டன. அடுத்த 10 ஆண்டுகளுக்கு பாஜக கூட்டணியில் இருப்போம். பாஜகவுடன் இணைந்து மாநிலத்தின் வளா்ச்சிக்காக பணியாற்றுவோம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT