இந்தியா

தில்லி மாநகராட்சி திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

5th Apr 2022 04:20 PM

ADVERTISEMENT

 

தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் இணைக்கும் வகையிலான மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

தேசிய தலைநகா் தில்லியில் தற்போது வடக்கு, தெற்கு, கிழக்கு என மூன்று மாநகராட்சிகள் உள்ளன. இதில் வடக்கு, தெற்கில் தலா 104 வாா்டுகளும், கிழக்கில் 64 வாா்டுகளும் என மொத்தம் 272 வாா்டுகள் உள்ளன.

இந்த நிலையில், இந்த மூன்று மாநகராட்சிகளையும் ஒன்றிணைக்கும் தில்லி மாநகராட்சி (திருத்தம்) சட்டம்- 2022 மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசினார்.

ADVERTISEMENT

முன்னதாக, கடந்த மார்ச் 30ஆம் தேதி தில்லி மாநகராட்சி (திருத்தம்) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT