இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: கடந்த 3 மாதங்களில் 42 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

5th Apr 2022 03:01 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 மாதங்களில் 42 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தலைமை இயக்குநர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீநகரில் உள்ள மைசுமாவில் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

மேலும் அவர் கூறியதாவது, 

ADVERTISEMENT

கடந்த 2021-இல் பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில்  மொத்தம் 32 வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதிகள் மக்களின் எதிரிகள், காஷ்மீரில் மக்கள் அமைதியான வாழ்க்கையை நடத்தி வருவதை பயங்கரவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சமீபத்தில் பள்ளத்தாக்கில் காஷ்மீர் அல்லாத தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனத்தை காட்டுகிறது. 

இந்த தாக்குதலுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இந்த சம்பவங்கள் குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT