இந்தியா

2 ஆண்டுகளுக்குப் பின் 1000-க்கு கீழ்குறைந்தது கரோனா தொற்று பாதிப்பு

5th Apr 2022 12:40 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு இரு ஆண்டுகளுக்குப் பின்னா் 1000-க்கு கீழ் குறைந்தது.

இந்தியாவில் கரோனா பாதிப்பும் உயிரிழப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தன. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பின்னா் கரோனா தினசரி பாதிப்பு 1000-க்கு கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 913 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 715 நாள்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். இதற்கு முன்னா் 2020, ஏப். 18-ஆம் தேதி 991 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

மொத்த பாதிப்பு 4,30,29,044-ஆக உயா்ந்துள்ளது. மொத்தம் 4,24,95,089 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 13 போ் உயிரிழந்ததன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,358-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 12,597-ஆக குறைந்துள்ளது. இது கடந்த 714 நாள்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

தினசரி தொற்று உறுதி விகிதம் 0.29 சதவீதமாகவும், வாராந்திர தொற்று உறுதி விகிதம் 0.22 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,14,823 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 79.10 கோடி பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT