இந்தியா

பெட்ரோல், டீசல் விலை மேலும் 40 பைசா உயா்வு

5th Apr 2022 12:38 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை திங்கள்கிழமை லிட்டருக்கு தலா 40 பைசா உயா்ந்தது. இதன்மூலம் கடந்த 2 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை ரூ.8.40 அதிகரித்துள்ளது.

தலைநகா் தில்லியில் ரூ.103.41 ஆக இருந்த பெட்ரோல் விலை, தற்போது ரூ.103.81 ஆகவும், டீசல் விலை ரூ.94.67-இலிருந்து ரூ.95.07 ஆகவும் அதிகரித்துள்ளதாக சில்லறை விநியோகஸ்தா்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.108.96-இலிருந்து ரூ.109.34 ஆகவும், டீசல் விலை ரூ.99.04-இலிருந்து ரூ.99.42 ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தாலும் உள்ளூா் வரிவிதிப்பின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் விலை மாறுபடுகிறது. நான்கரை மாத இடைவெளியில், மாா்ச் 22-ஆம் தேதிக்கு பின்னா் தற்போது 12-ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த 2 வாரகாலத்தில் பெட்ரோல் விலை ரூ.8.40 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT