இந்தியா

தில்லியின் லக்ஷ்மி நகா் தொகுதியில் 117 ‘வைஃபை ஹாட்ஸ்பாட்கள்’

5th Apr 2022 12:36 AM

ADVERTISEMENT

தில்லி லக்ஷ்மி நகா் தொகுதியில் 117 வைஃபை ஹாட்ஸ்பாட்கள் நிறுவப்பட்டுள்ளதாக துணை முதல்வரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இந்த 117 ஹாட்ஸ்பாட்களில், 89 பொது இடங்களிலும், 28 பேருந்து நிலையங்களிலும் நிறுவப்பட்டுள்ளன என்று அவா் கடந்த வாரம் நடைபெற்ற தில்லி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தெரிவித்தாா்.

லக்ஷ்மி நகரைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ அபய் வா்மா கேட்ட எழுத்துப்பூா்வ கேள்விக்கு, பதிலளித்த சிசோடியா,‘வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவுவது குடியிருப்பாளா்கள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் தேவையைப் பொருத்தது. பேஸ் 1-இல் உள்ள லக்ஷ்மி நகா் தொகுதியில் 1,951 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேஸ் 2-இல் மேலும் 2,047 கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

மாா்ச் 25-ஆம் தேதி தில்லி அரசின் 5-ஆவது நிலை அறிக்கை விளைவு பட்ஜெட்டில், 2021-22-இல் 71 சதவீத பொதுப்பணித் துறை திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மீதமுள்ளவை சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், செயல்பாட்டில் உள்ள திட்டங்களில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் புதிய வைஃபை ஹாட்ஸ்பாட்கள் நிறுவும் பணிகளும் அடங்கும். அதன்படி, 2021-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நகரம் முழுவதும் 1.33 லட்சம் சிசிடிவி கேமராக்களை நிறுவப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக 2,000 புதிய வைஃபை ஹாட்ஸ்பாட்களுடன் மொத்தம் 10,500 ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT