கடந்த நிதியாண்டில் சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.2744 கோடி வருவாயை தெற்கு ரயில்வே ஈட்டியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கடந்த நிதியாண்டில் (2021-22) தெற்கு ரயில்வே 30.56 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் 26.84 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது.
இதனை ஒப்பிடும்போது சரக்கு போக்குவரத்தை கையாள்வதில் தெற்கு ரயில்வே 14 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. அதற்கேற்ப வருவாயும் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி முந்தைய நிதியாண்டில் (2020-21) ரூ.2162 கோடி வருவாய் ஈட்டியிருந்த தெற்கு ரயில்வே, கடந்த நிதியாண்டில் ரூ.2744 கோடி வருவாயை சரக்கு போக்குவரத்து மூலம் ஈட்டியுள்ளது.
அதே நேரம், சரக்கு ரயில்களின் சராசரி வேகமும் மணிக்கு 49.4 கிமீ என்ற நிலையை அடைந்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதனிடையே, 7780 டன் திரவ ஆக்சிஜனை, பல்வேறு இடங்களில் இருந்து தமிழகம், கேரளத்துக்கு எடுத்து சென்றும் சேவை புரிந்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.