இந்தியா

பிரதமரின் ஜன் தன் கொள்ளைத் திட்டம்: எதைச் சொல்கிறார் ராகுல்?

4th Apr 2022 05:50 PM

ADVERTISEMENT


புது தில்லி: பிரதமரின் ஜன் தன் கொள்ளைத் திட்டம் என்று, நாள்தோறும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி இது குறித்து வரைபடம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2014ஆம் ஆண்டு பைக், கார், டிராக்டர், டிரக் போன்றவற்றின் எரிபொருள் டேங்குகளை நிரப்பத் தேவையான தொகையும், தற்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
 

அந்த வரைபடத்துடன் பிரதமரின் ஜன் தன் கொள்ளைத் திட்டம் என்று பதிவிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT