இந்தியா

பெட்ரோல் விலை உயர்வு: மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி

4th Apr 2022 12:13 PM

ADVERTISEMENT

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைடுத்து, பகல் 12 வரை அவைத் தலைவர் வெங்கைய நாயுடு ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க |  நீட் விலக்கு விவகாரம்: மக்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு

ADVERTISEMENT

தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அவை கூடியவுடன், அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு வந்த எதிர்க்கட்சியினர் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால், அவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 14 நாள்களில் 12 முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT