இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

4th Apr 2022 11:29 AM

ADVERTISEMENT

பெட்ரோல் விலை உயர்வை விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த 14 நாள்களில் 12ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், பெட்ரோல் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை முன்வைத்தனர். இதற்கு அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

Tags : Rajya sabha
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT