இந்தியா

நவாப் மாலிக் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

4th Apr 2022 08:24 PM

ADVERTISEMENT


பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக்கின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததில் மகாராஷ்டிர சிறுபான்மையின விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அமலாக்கத் துறையால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிக்கநாளும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி மக்களிடம் கொள்ளை: ராகுல் காந்தி குற்றம்சாட்டு

மும்பை உயர் நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது.

ADVERTISEMENT

கடந்த மார்ச் 7-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் இருந்த நவாப் மாலிக்கை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், நீதிமன்றக் காவல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் ஏப்ரல் 18-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.

Tags : Nawab Malik
ADVERTISEMENT
ADVERTISEMENT