இந்தியா

நாளைமுதல் மாநிலங்களவைக்கு வர பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவு

4th Apr 2022 04:42 PM

ADVERTISEMENT

பாரதிய ஜனதாவை சேர்ந்த அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் நாளைமுதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை அவைக்கு வர அக்கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி தொடங்கி இரு அவைகளிலும் அலுவல்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஏப்ரல் 5 முதல் 8ஆம் தேதி வரை மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்பதால் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் மாநிலங்களவைக்கு கட்டாயம் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |  நீட் விலக்கு விவகாரம்: மக்களவையிலிருந்து திமுக வெளிநடப்பு

ADVERTISEMENT

இதற்கிடையே, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வை கண்டித்து மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT