இந்தியா

ஆந்திர மாநிலத்தில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்

4th Apr 2022 10:41 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலத்தில் 13 புதிய மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். 

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, ஒவ்வொரு மக்களவைத் தொகுதியையும் தனி மாவட்டமாக உருவாக்குவதாக முதல்வா் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தாா்.

அதனை நிறைவேற்றும் வகையில், 25 மக்களவைத் தொகுதியையும் தனி மாவட்டங்களாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து பழங்குடியினா் பகுதியை பிரித்து கூடுதலாக ஒரு மாவட்டத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க- இந்தியாவில் 715 நாள்களுக்கு பிறகு ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

ADVERTISEMENT

அதன்படி, தற்போதுள்ள 13 மாவட்டங்களைப் பிரித்து 26-ஆக அதிகரிப்பது குறித்தான வரைவு அறிவிக்கையை ஆந்திர அரசு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதுகுறித்த பொதுமக்களின் பரிந்துரைகள் மற்றும் ஆட்சேபங்களையும் மாநில அரசு வரவேற்றது. 

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் 13 புதிய மாவட்டங்களின் நிர்வாகப் பணிகளை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தடேபள்ளியில் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT