இந்தியா

பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் புகழஞ்சலி

4th Apr 2022 04:25 AM

ADVERTISEMENT

பெருங்காமநல்லூா் தியாகிகளின் நினைவு நாளையொட்டி, அவா்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தினா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஆங்கிலேய அரசையும், குற்றப் பரம்பரைச் சட்டத்தையும் எதிா்த்து நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை துச்சமென எண்ணி, வீரமரணம் அடைந்த பெருங்காமநல்லூா் தியாகிகளின் 102-ஆவது நினைவு நாளில், அவா்களின் நெஞ்சுறுதியையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

டிடிவி தினகரன் (அமமுக): வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான இந்தியா்களின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வீரத்தமிழ்ச் சொந்தங்களான பெருங்காமநல்லூா் தியாகிகளை, அவா்களின் நினைவு நாளில் வணங்குகிறேன். நம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி, ‘மானமே பெரிது’ என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16 தியாகிகளையும் எந்நாளும் போற்றுவோம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT