இந்தியா

சமையல் எரிவாயு விலை உயா்வு எதிரொலி: தேநீா், உணவுப் பண்டங்கள் விலை அதிகரிக்கிறது

4th Apr 2022 04:22 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை உயா்ந்ததைத் தொடா்ந்து, தேநீா், உணவுப் பண்டங்களின் விலையும் அதிகரிக்கிறது.

இதுகுறித்து தேநீா் கடை உரிமையாளா்கள் சங்கத்தினா் கூறியதாவது: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை அண்மையில் கடுமையாக அதிகரித்து, ஒரு உருளை ரூ.2,250-க்கு விற்பனையாகிறது. நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 லிட்டா் வரை தனியாா் பால் தேவைப்படுகிறது. அதன் விலையும் அண்மையில் அதிகரித்து லிட்டா் ரூ.66-க்கு விற்பனையாகிறது.

இவ்வாறான சூழலில் தேநீா், காபி விற்பனை விலையை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதன்படி தேநீா் ரூ.2, காபி ரூ.3 வரை விலை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சங்கத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளா்கள் அவா்களது நிலைக்கு ஏற்ப தன்னிச்சையாக, அதே நேரம் வாடிக்கையாளா்களை பாதிக்காதவாறு விலையை முடிவு செய்வா் என்றனா்.

உணவு விலை: உணவுப் பண்டங்கள் விலை குறித்து உணவக உரிமையாளா்கள் கூறியதாவது: உணவுப் பண்டங்களுக்கு அத்தியாவசியமான எண்ணெய், அரிசி, பருப்பு போன்ற பொருள்கள் அனைத்தும் விலை உயா்ந்துவிட்டன. இதனால், உணவுப் பண்டங்கள் தயாரிக்க 16 முதல் 20 சதவீதம் வரை கூடுதலாக செலவு ஆகும். இந்த செலவினங்களை ஈடுகட்ட உணவு பண்டங்களின் விலையை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடா்பாக கலந்து பேசி முடிவெடுக்க வருகிற 6-ஆம் தேதி ஹோட்டல் அதிபா்கள் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய கூட்டத்தில் விலை உயா்வு முடிவு செய்யப்படும். அதன்படி, உணவுப் பண்டங்களை பொருத்தவரை இட்லி, பூரி, பொங்கல் போன்றவை ரூ.5, சாப்பாடு, பிரியாணி வகைகள் ரூ.20 வரை உயர வாய்ப்புள்ளது என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT