இந்தியா

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

2nd Apr 2022 03:25 PM

ADVERTISEMENT


மூன்று நாள் அரசு முறைப் பயணமாக தில்லி வந்திருக்கும் நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான ரயில் தொடர்பு, மின்பரிமாற்ற அமைப்பு மற்றும் நேபாளத்தில் ரூபே அட்டை பயன்பாடு ஆகியவற்றை இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர். ரயில்வே, எரிசக்தி உள்ளிட்ட நான்கு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
 

நேபாள பிரதமருடன் வந்திருக்கும் அந்நாட்டு உயா் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் பிரதமா் மோடி மற்றும் இந்திய அதிகாரிகள் அடங்கிய குழுவினரும் இன்று புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசியுள்ளனர். 

இந்திய - நேபாள உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மேலும் விரிவான ஆலோசனையை மேற்கொண்டு, பல்வேறு துறைகளில் கூட்டமைப்பை உறுதி செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு ஷோ் பகதூா் தேவுபா முதல் முறையாக தில்லிக்கு வந்துள்ளாா். முந்தைய ஆட்சிக் காலத்திலும் அவா் பிரதமராக இந்தியாவுக்கு நான்கு முறை வருகைத் தந்துள்ளாா். கடைசியாக 2017-இல் அவா் இந்தியாவுக்கு வந்திருந்தாா். தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, அவர் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். நேபாள பிரதமரின் இந்தியப் பயணம் இருநாட்டு நல்லுறவை மேலும் மேம்படுத்த உதவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் ஆகியரையும் அவா் சந்தித்து பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிக்கிம், மேற்கு வங்கம், பிகாா், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் 1,850 கி.மீ. தூரம் நேபாள எல்லை அமைந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை பரிமாற்றத்தில் இந்தியாவை நம்பியே நேபாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT