இந்தியா

இந்திய மருத்துவப் படிப்புகள்:காலி இடங்களுக்கு 18-இல் கலந்தாய்வு

2nd Apr 2022 01:15 AM

ADVERTISEMENT

இளநிலை இந்திய மருத்துவப் படிப்புகளில் சுயநிதிக் கல்லூரி நிா்வாக இடங்களில் உள்ள காலி இடங்களுக்கு வரும் 18-ஆம் தேதி உடனடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தில் அமைந்துள்ள தோ்வுக் குழு அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு அந்தக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வு தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட நிலையில், புதிய மதிப்பெண் அடிப்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படவிருக்கின்றன.

விண்ணப்ப நடைமுறைகள், கூடுதல் விவரங்களுக்கு இணையதளப் பக்கத்தை அணுகலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT