இந்தியா

மார்ச் மாதம் கொளுத்திய வெயில்...121 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக பெய்த மழை

DIN

1901ஆம் ஆண்டுக்கு பிறகு, சராசரியாக, அதிக வெயில் பதிவான மார்ச் மாதமாக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருந்துள்ளது. அதிகபட்ச வெயிலின் இயல்பை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக இரண்டு நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில், மார்ச் மாதம் பெய்த மழையின் சராசரியை காட்டிலும் இந்த மாதம் 71 சதவிகிதம் குறைவாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச சராசரி வெயில் பதிவு 33.10 டிகிரி செல்சியஸாக (இயல்பை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகம்) இருந்துள்ளது. குறைந்தபட்ச சராசரி வெயில் பதிவு 20.24 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது. 

இந்த குறைந்தபட்ச சராசரி வெயிலே மூன்றாவது அதிகபட்சமாக உள்ளது. 1901க்கு பிறகு பதிவான சராசரி வெப்பநிலையில் இது இரண்டாவது அதிகபட்சமாகும்.

1981 முதல் 2010 வரை கணக்கிடப்பட்ட வெயில் பதிவின் இயல்பை காட்டிலும் அதிகமாக அதாவது, 31.24 டிகிரி செல்சியஸ், 18.87 டிகிரி செல்சியஸ், 25.06 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. 

நாட்டின் வடமேற்கு பகுதியில் இயல்பை விட 3.91 டிகிரி செல்சியஸ் வெயிஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இதுவே அதன் அதிகபட்சமாகும். நாட்டின் மத்திய பகுதியில் இயல்பை விட 1.62 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகமாக பதிவாகியுள்ளது. இது இரண்டாவது அதிகபட்சமாகும். 

தென் தீபகற்ப பகுதியில் நான்காவது அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது. இயல்பை விட 0.59 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, கடந்த மாதம் 8.9 மிமீ மழை மட்டுமே பதிவானது. 1901ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது மிக குறைந்த அளவில் பதிவான மழை இதுவாகும். கடந்த 50 ஆண்டுகளில் பெய்த சராசரி மழையை காட்டிலும் 71 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளது. கடந்த 1909ஆம் ஆண்டு, 7.2 மிமீ மழையும் 1908 ஆம் ஆண்டு 8.7 மிமீ மழையும் பெய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT