இந்தியா

மேற்குவங்க இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி பவானிபூரில் 21.73 % வாக்குகள் பதிவு

30th Sep 2021 12:59 PM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூரில் 11 மணிநிலவரப்படி 21.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி, தான் வழக்கமாகப் போட்டியிடும் பவானிபூரில் போட்டியிடாமல், தனக்கு சவால் விட்ட பாஜக வேட்பாளரும், முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்தவருமான சுவேந்து அதிகாரியை எதிா்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.

இருப்பினும் திரிணமூல் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றதால் முதல்வராக மம்தா பொறுப்பேற்றாா். முதல்வா் பதவியைத் தக்கவைக்க அவா் 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதையடுத்து, மம்தா போட்டியிடுவதற்காக, மாநில அமைச்சரும் பவானிபூா் எம்எல்ஏவுமான சோபன்தேவ் சட்டோபாத்யாய தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து பவானிபூா் மற்றும் காலியாகவுள்ள ஜாங்கிபூா், சம்சோ்கஞ்ச் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

காலை 11 மணிநிலவரப்படி, பவானிபூரில் 21.73 சதவீதம், சம்சோ்கஞ்ச் 40.23 சதவீதம், ஜாங்கிபூா்  36.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை எதிா்த்து பாஜக சாா்பில் மூத்த வழக்குரைஞா் பிரியங்கா டிப்ரிவால், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீஜிவ் பிஸ்வாஸ் ஆகியோா் களத்தில் உள்ளனர்.

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Bhabanipur bypoll west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT