இந்தியா

விமானப் படை பெண் அதிகாரி வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

30th Sep 2021 04:44 PM

ADVERTISEMENT


புது தில்லி: கோவையில் விமானப் படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், இருவிரல் பரிசோதனை செய்ததைக் கண்டித்து விமானப் படை தலைமை தளபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை விமானப் படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிக்கலாமே.. கோவை: பெண் விமானப்படை அதிகாரிக்கு தடைசெய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை

அதில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உண்மைதானா என்பதை அறிய இருவிரல் பரிசோதனை செய்யப்பட்டிருப்பது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.

ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட சோதனையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியது எனவும், இருவிரல் சோதனை அறிவியலுக்கு புறம்பானது என இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் 2014ஆம் ஆண்டு தடை செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. 51 சக்தி பீடங்களின் மகத்துவம் (முழு விவரங்களுடன்) - நவராத்திரி ஸ்பெஷல்!

மேலும், இந்த சம்பவத்தில் உண்மைநிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், இந்திய விமானப் படையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, 2014ஆம் ஆண்டு இருவிரல் பரிசோதனையை நிறுத்தியது தொடர்பாக அறிவுறுத்தல்களை வழங்கவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

Tags : NCW kovai IAF rape case
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT