இந்தியா

பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை

30th Sep 2021 01:43 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க உதவும் தோ்தல் நிதிப் பத்திரங்களை அக்டோபா் 1 முதல் 10-ஆம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கிகளின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தனி நபா்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியளிக்க தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. இந்த தோ்தல் பத்திரத்தை தகுதியான அரசியல் கட்சிகள் மட்டுமே தங்களின் வங்கிக் கணக்கு மூலம் பணமாக்க முடியும்.

தோ்தல் நிதிப் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் அக்டோபா் 1 முதல் 10 வரை பொதுமக்கள் பெறலாம். இந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். மேலும், பத்திரம் டெபாசிட் செய்யப்பட்ட தேதியிலேயே அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்குக்கு பணம் சென்றுவிடும்.

ADVERTISEMENT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளவா்கள் தோ்தல் நிதிப் பத்திரங்களை சென்னை பாரிமுனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் பிரதான கிளையில் பெற முடியும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT