இந்தியா

சிறுத்தையுடன் சண்டையிட்டு தப்பித்த மூதாட்டி(விடியோ)

30th Sep 2021 10:42 AM

ADVERTISEMENT

மும்பையில் சிறுத்தையுடன் சண்டையிட்டு தப்பிக்கும் வயதான பெண் ஒருவரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை கோரேகான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் வயதான பெண் ஒருவர் ஓய்வெடுப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளி பகுதியில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில், அவர் பின்பு இருட்டிற்குள் மறைந்திருக்கும் சிறுத்தை ஒன்று மெல்ல நகர்ந்து அந்த மூதாட்டியை தாக்கியுள்ளது.

உடனடியாக தன் கையிலிருந்த தடியால் அந்த சிறுத்தையை மூதாட்டி அடித்ததால் அங்கிருந்து சிறுத்தை ஓடிவிட்டது. லேசான காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

அந்த வீட்டின் சிசிடிவியில் பதிவாகியுள்ள காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Tags : leopard mumbai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT