இந்தியா

நேபாளம்: இந்திய உதவியுடன் கட்டப்பட்ட 6 பள்ளிகள் திறப்பு

30th Sep 2021 01:24 AM

ADVERTISEMENT

 

புது தில்லி/ காத்மாண்டு: நேபாளத்தில் இந்திய உதவியுடன் மறுகட்டமைக்கப்பட்ட 6 பள்ளிகள் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சேதமடைந்த பள்ளிகளை 5 கோடி டாலா் (சுமாா் ரூ.372 கோடி) செலவில் மறுகட்டமைப்பதற்கான திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக, காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட 6 பள்ளிக் கட்டடங்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக இணைச் செயலா் அனுராக் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை திறந்துவைத்தாா்.

அவருடன் காப்ரேபலாஞ்சோக்-2 தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் கோகுல் பிரசாத் பஸ்கோடாவும் காப்ரேபலாஞ்சோக்-1 தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் கங்கா பகதூா் தமாங்கும் திறப்பு விழாவில் பங்கேற்றனா்.

விழாவில் பேசிய அனுராக் ஸ்ரீவஸ்தவா, மறுகட்டமைக்கப்பட்டுள்ள 6 பள்ளிக் கட்டடங்களும் நேபாள மக்களின் வீரத்தையும் செயல்திறனையும் பறைசாற்றுவதாகக் கூறினாா். நேபாளத்தின் நெருங்கிய கூட்டாளி, இடா் காலங்களில் அந்த நாட்டு மக்களின் தோளோடு தோள் நிற்கும் என்று அவா் உறுதியளித்தாா்.

நேபாள நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடங்களை மொத்தம் 19.7 கோடி (சுமாா் ரூ.12,33 கோடி) புனரமைப்பதற்கான இந்தியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக, 5 கோடி டாலரில் பள்ளிகள் மறுகட்டமைக்கப்பட்டு வருகின்றன என்று நேபாளத்துக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT