இந்தியா

எதிர்க்கட்சி அணியில் இருந்து மம்தாவை நீக்க வேண்டும்

30th Sep 2021 04:14 AM

ADVERTISEMENT

 

கொல்கத்தா: வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அணியை அமைக்கும் முயற்சிகளில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அளவில் கால் பதிக்கும் தனது முயற்சியின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் பிரமுகர்களை திரிணமூல் காங்கிரஸ் சேர்த்துக் கொண்டு வருகிறது. அத்தகைய முக்கியஸ்தர்களில் சுஷ்மிதா தேவ், கோவா முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரான அதீர் ரஞ்சன் சௌதரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
மம்தா பானர்ஜி நம்பத்தகாத கூட்டணித் தலைவர் ஆவார். அவர் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை பலிகொடுத்து, அதன்மூலம் வளர முயற்சிக்கிறார்.
2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அணியை அமைக்கும் முயற்சிகளில் மம்தா பானர்ஜிக்கு இடமளிக்கக் கூடாது. பாஜகவின் கையாளைப் போன்றவர் அவர்; பாஜகவுக்கு எதிரான போரில் நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல.
தனது குடும்பத்தினரையும் கட்சித் தலைவர்களையும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்காக அவர் பிரதமர் மோடியையும் பாஜகவையும் மகிழ்விக்க முயற்சித்து வருகிறார். அதற்குப் பிரதிபலனாக காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற தனது இலக்கை பாஜக எட்டுவதற்கு அவர் உதவி வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் குலைக்க மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. காங்கிரûஸ பாதிக்கச் செய்தே திரிணமூல் காங்கிரஸ் வளர்ந்து வந்துள்ளது. முதலில் அதை மேற்கு வங்கத்தில் செய்த அவர்கள் தற்போது தேசிய அளவில் செய்ய முயற்சிக்
கின்றனர்.
மம்தா பானர்ஜி நாட்டின் அடுத்த பிரதமராகும் கனவில் இருக்கிறார். அதற்கு மிகப்பெரிய தடையாக காங்கிரஸ் இருக்கிறது. காங்கிரஸ் இருக்கும் வரை அவரால் எதிர்க்கட்சி அணியின் தலைவராக இருக்க முடியாது. அதனால்தான் காங்கிரஸின் நற்பெயரை சீர்குலைக்கவும் அதன் தலைமையின் மதிப்பைக் குறைக்கவும் அவர் முயற்சித்து வருகிறார்.
ராகுல் காந்தியின் மதிப்பைக் குறைக்க பாஜகவும் சில எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டு முயற்சிக்கின்றன. அவை ராகுலைக் கண்டு பயப்படுவதே இதற்குக் காரணம்.
எதிர்க்கட்சி அணியின் தலைவர் என்று காங்கிரஸ் எப்போதும் உரிமை கோரியதில்லை. ஏனெனில் எதிர்க்கட்சிகளின் இயல்பான தலைவராக காங்கிரஸ் கட்சியே இருக்கிறது. காங்கிரஸ் இல்லாமல் நாட்டில் பாஜக எதிர்ப்பு அணி இருக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது பகிர்ந்து கொள்ளப்பட்ட திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமே தவிர காங்கிரûஸ பலி கொடுத்து அல்ல. பஞ்சாப் காங்கிரஸிஸ் ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT