இந்தியா

கர்நாடகத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 20 குரங்குகள்

30th Sep 2021 06:28 PM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் 20 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள ஆர்என் ஜலப்பா மருத்துவமனை அருகே புதன்கிழமை இறந்த 20 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கர்நாடக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குரங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
கோலார் துணை ஆணையர் செல்வமணி, "தங்கள் பகுதிகளில் குரங்குகள் தொல்லை உள்ளவர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்து குரங்குகளை வேறு இடத்திற்கு மாற்றலாம். 

இதையும் படிக்க- தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

மேலும் இச்சம்பவத்தில் மாநில வனத்துறை மற்றும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹாசன் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

Tags : Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT