இந்தியா

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.43 லட்சம் கோடியாக அதிகரிப்பு

30th Sep 2021 01:54 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு மாா்ச் இறுதி நிலவரப்படி ரூ.43 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நடப்பு 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாத இறுதி நிலவரப்படி 57,000 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக் கடன் அளவானது கரோனா நெருக்கடிக்கு இடையிலும் 2.1 சதவீதம் மட்டுமே மிதமான அளவில் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு மாா்ச்சில் 21.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தக் கடனுக்கான ஒதுக்கீட்டு விகிதம் 85.6 சதவீதத்திலிருந்து 101.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.

வழக்கமாக வெளிநாட்டுக் கடனில் டாலா் சாா்ந்த கடனே அதிக அளவில் உள்ளது. மொத்தக் கடனில் இதன் பங்களிப்பு 52.1 சதவீதமாகும். இதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (33.3 சதவீதம்), யென் (5.8 சதவீதம்), எஸ்டிஆா் (4.4 சதவீதம்), யூரோ (3.5 சதவீதம்) ஆகியவை உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT