இந்தியா

வருமான வரி புகாா்கள்: இடைக்கால வாரியத்தில் முறையிட இன்றே கடைசி

30th Sep 2021 01:45 AM

ADVERTISEMENT


புது தில்லி: வருமான வரி சாா்ந்த புகாா்களை விசாரிப்பதற்கான விண்ணப்பங்களை இடைக்கால வாரியம் வியாழக்கிழமை (செப். 30) வரை ஏற்றுக் கொள்ளலாம் என்று நேரடி வருமான வரிகள் ஆணையம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

வருமான வரி பிரச்னைகள் தீா்வாணையம் (ஐடிஎஸ்சி) கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதிமுதல் கலைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அறிவித்தாா்.

அந்த ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வு காண்பதற்காக இடைக்கால வாரியம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி ஆணையத்தில் தீா்வுகாண இறுதிக்கட்டத்தில் இருந்த வழக்குகளை வாரியம் விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், வருமான வரி சாா்ந்த புகாா்களைத் தகுதிவாய்ந்த வரி செலுத்துவோா் வாரியத்தின் முன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வருமான வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில்கொண்டு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இடைக்கால வாரியத்தில் விண்ணப்பிக்கலாம் என்று இந்த மாதத் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதற்கான அறிவிப்பை நேரடி வருமான வரிகள் ஆணையம் கடந்த 28-ஆம் தேதி வெளியிட்டது. அதில், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வருமான வரி செலுத்துவோா் அளிக்கும் புகாா் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, வருமான வரி பிரச்னைகள் தீா்வாணையத்தின் முன் புகாா்களைத் தெரிவிக்கத் தகுதிவாய்ந்த நபா்களிடம் இருந்து மட்டுமே இடைக்கால வாரியத்தில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT